கொரோனா பாதித்தவர்களில் 99.9 சதவீதம் பேருக்கு மீண்டும் வருவதில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 2272
தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 99.9 சதவிகிதம் பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று வருவதில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 99.9 சதவிகிதம் பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று வருவதில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை பின்பற்றுவதே மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி என்றார்.

முன்னதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா உள்நோயாளிகள் பிரிவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். நோயாளிகளுக்கான ஆம்புலன்சில் கவச உடையுடன் ஏறி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments