இந்தியாவில் முதல் முறையாக அதிநவீன சிடி ஸ்கேனர் கருவி - அப்பலோ மருத்துவமனையில் அறிமுகம்
அப்பலோ மருத்துவமனை இதய நோய் கண்டறிதலில் இந்தியாவில் முதல் முறையாக அதிநவீன அக்விலியன் ஒன் பிரிசம் 640 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதனை தொடங்கி வைத்தார். அப்பல்லோ மருத்துவமனைகள் குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழு துணைத் தலைவர் பிரீதா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஸ்கேனர் மூலம் இதய செயல்பாடு, இதய ரத்த வழங்கல் மற்றும் இதய தசை செயல்பாடு ஆகியவற்றை ஒரே பரிசோதனையில் விரைவாக மதிப்பிட முடியும். இதயம் மட்டுமின்றி மூளை, சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளையும் ஸ்கேன் செய்ய பயன்படுகிறது.
நோய் கண்டறியும் சக்தியை மேம்படுத்துவதுடன், குறைந்த கதிர்வீச்சு வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதயத்தை 360 டிகிரி கோணத்தில் 1.25 நொடிகளில் படம்பிடிக்கும் திறன் கொண்டது. ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால் 15 நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம்.
Comments