தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கு, காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மற்றொரு கைதியான ராஜாசிங் வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசாரும் நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
ராஜா சிங், மற்றும் மார்டின் போலீசாரால் தாக்கப்பட்டது குறித்தும், தட்டார்மடத்தில் செல்வன் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டதில் தட்டார்மடம் காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, செல்வன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ள திருமண வேல் உள்பட 4 பேரையும், 6 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் விசாரிக்க கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments