யுபிஎஸ்சி தேர்வு தேதியை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம்
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 4 ஆம் தேர்வு நடைபெறும் என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. எனினும் கடைசி முயற்சியில் இருப்பவர்களுக்கு, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு வாய்ப்பை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் தேர்வு எழுத வரும் நபர்களுக்கு, தனியாக அமர வைத்து தேர்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Supreme Court declines to postpone UPSC Civil Services (Preliminary) Examination, scheduled for October 4 pic.twitter.com/Cf3s49cWyv
— ANI (@ANI) September 30, 2020
Comments