வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம்: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கிராமசபைக் கூட்டங்களில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் காந்தி அடிகள் பிறந்த நாளான, அக்டோபர் இரண்டாம் நாளன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து, அ.தி.மு.க. ஆதரித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரகப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையைக் காப்பாற்றக் கட்சி வேறுபாடு பாராமல், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளை கார்ப்பரேட்களுக்கு அடிமையாக்கத் துடிக்கும் பாஜக - அதிமுக அரசுகளுக்கு ஊராட்சி மன்றங்களிலும் எதிர்ப்புத் தெரிவிப்போம்!
— M.K.Stalin (@mkstalin) September 30, 2020
அக்டோபர்-2 அன்று கிராம சபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பினைக் காட்டுவோம்! நம் விவசாயிகள் நலன் காப்போம்! pic.twitter.com/6lSpgYR6Mh
Comments