லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்குநரவையைக் கலைக்கக் கோரி வழக்கு
லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை 21 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
வங்கியின் முன்னாள் மூத்த மேலாளர் சுப்பிரமணியன் தொடுத்துள்ள வழக்கில், 2017ஆம் ஆண்டு 2 புள்ளி ஆறு ஏழு விழுக்காடாக இருந்த வாராக்கடன், இயக்குநரவையின் தவறான நிர்வாகத்தால் 2020 மார்ச்சில் 25 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுக் கொள்கையை மீறிப் பல நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்ததால், வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கியின் இயக்குநரவையைக் கலைத்துவிட்டு நிர்வாகியை நியமிக்க ரிசர்வ் வங்கிக்கும், நிதியமைச்சகத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணங்களை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Comments