ஹாத்ராஸ் தலித் பெண் பலி.... கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி ஆணை
உத்தரபிரதேசத்தில் தலித் பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் அரசுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஹாத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண்ணை துப்பட்டாவால் கட்டி இழுத்து சென்று முதுகில் பலமாக தாக்கியதுடன், நாக்கையும் வெட்டிய நிலையில், பலாத்காரமும் செய்ததால் படுகாயமடைந்த அவர் டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வன்கொடுமை செய்த 4 பேரும் கைது செய்யப்பட்ட போதும், அவர்களை உடனடியாக தூக்கிலிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்தனர்.
ஆனாலும் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றவர்கள் தகனம் செய்யாமல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களிடமிருந்து உடலை வலுக்கட்டாயமாக கைப்பற்றிய போலீசார் அதிகாலை 2.30 மணிக்கு தகனம் செய்தனர்.
இவ்வழக்கை விசாரிக்க உள்துறை செயலாளர் தலைமையிலான 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ள மாநில அரசு, 7 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியும் உத்தரவிட்டுள்ளார்.
Prime Minister Narendra Modi spoke to me over #Hathras incident, he said that strictest of action be taken against the culprits: UP CM Yogi Adityanath pic.twitter.com/bqMQpCqOEO
— ANI UP (@ANINewsUP) September 30, 2020
Comments