டிரம்ப்-ஜோ பிடன் நேரடி விவாதம்... வாயை மூடுமாறு டிரம்பை நோக்கி கத்திய ஜோ பிடன்... புதினின் கைப்பொம்மை டிரம்ப் எனவும் விமர்சனம்
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான முதலாவது நேரடி விவாதத்தில் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் காரசாரமாக மோதிக் கொண்டனர். ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் நடந்த விவாதத்தின் போது ஜோ பிடனை தீவிர இடதுசாரி என டிரம்ப் விமர்சித்தார்.
ஜோ பிடனின் மகன்களில் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என்று கூறிய டிரம்பிற்கு பதிலளித்த ஜோ பிடன், டிரம்பை பொய்யர், இனவெறி பிடித்தவர், கோமாளி என்று வர்ணித்தார். உச்சகட்டமாக டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினின் கைப்பொம்மை என்று கூறினார்.
அதற்கு பதிலளிக்காத டிரம்ப் ஜோ பிடனின் மகன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குப் போன ஜோ பிடன். டிரம்பை நோக்கி வாயை மூடுமாறு கத்தினார்.
இரண்டு வேட்பாளர்களும் கோபத்தில் மாறி மாறி திட்டிக் கொண்டதால், நவம்பர் 3 ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் பெருங்குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Biden and Trump targeted each other's record on race in America and the issue of 'law and order' at the first presidential debate https://t.co/gFzGcF5Odt #Debates2020 pic.twitter.com/pyYn2jeAQY
— Reuters (@Reuters) September 30, 2020
Comments