தூத்துக்குடியில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் அறைகலன்கள் உற்பத்தி மையம் அமைய உள்ளதாக தகவல்..!
தூத்துக்குடியில் நாலாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறைகலன்கள் உற்பத்தி மையத்தை அமைக்கத் தொழில்துறை சார்பில் பேச்சு நடைபெற்று வருகிறது.
மத்திய மாநில அரசுகள், தனியார் துறையின் பங்களிப்புடன் அறைகலன் உற்பத்தி மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்தை அமைக்கப் பரிசீலிக்கப்படும் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் உள்ளதாக மகிந்திரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
அறைகலன் உற்பத்தி ஆலைகள், வெளியூர்த் தொழிலாளர்கள் தங்குவதற்கான இடங்கள் ஆகியன அமைப்பதும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மர இறக்குமதி நடைபெறுவதாலும், திறன்மிகு தொழிலாளர்கள் கிடைப்பதாலும் அறைகலன் உற்பத்தி மையம் அமைக்க ஏற்ற இடமாகத் தூத்துக்குடி இருக்கும் என்றும், இதற்காக 50 விழுக்காடு விலையில் அரசு நிலம் வழங்க உள்ளதாகவும் தொழில்துறைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
Comments