மாடர்னா தடுப்பூசியால் வயதானவர்களிடமும் நோய் எதிர்ப்பு திறன் ஏற்படுவதாக சோதனையில் கண்டுபிடிப்பு
மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி, வயது குறைந்தவர்களைப் போன்று, வயதானவர்களிடமும் வைரசை அழிக்க கூடிய ஆன்டிபாடீசுகளை உற்பத்தி செய்வதாக, முதற்கட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் புளூ காய்ச்சலுக்கு போடப்படும் வீரியமிக்க ஊசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மட்டுமே இந்த தடுப்பூசியால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடர்னா தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முதலில் 18 முதல் 55 வயது வரை உள்ளவர்களிடமும், அதைத் தொடர்ந்து 56 முதல் 71 வயது மற்றும் அதற்கு அதிகமானவர்களிடம் நடத்தப்பட்டதில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.
Moderna COVID-19 vaccine appears safe, shows signs of working in older adults - study https://t.co/5B6mJfrTZe pic.twitter.com/7psGh7S7cD
— Reuters (@Reuters) September 30, 2020
Comments