சிரியாவில் 7 லட்சம் குழந்தைகளுக்கு ஒருவேளை உணவுகூடக் கிடைப்பதில்லை - சர்வதேச உதவிக் குழு அறிக்கை
நாட்டின் மோசமான பொருளாதாரம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடுவதாக சர்வதேச உதவிக் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அந்த அமைப்பின் அறிக்கையில், சிரியா முழுவதும் கடந்த 6 மாதங்களில் உணவு பாதுகாப்பற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 46 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டுப் போரால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தின் உள்ளூர் மதிப்பு குறைந்து போனதாகவும், கொரோனாவால் அந்த நிலைமை மேலும் சிக்கலாகி உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
Comments