வானில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு என தகவல்
சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து லேசான காற்று கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் 2 ரஷ்ய விண்வெளி வீரர்களும், ஒரு அமெரிக்க வீரரும் தங்கியுள்ளனர். அங்கிருந்து ஆகஸ்ட் மாதம் முதல் காற்று கசிந்து வந்தது.
ஆனால் எங்கிருந்து காற்று கசிகிறது எனத் தெரியாமல் இருந்ததால், அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர். அந்த கசிவு சிறிய அளவிலேயே இருப்பதாகவும், இதனால் ஆபத்தில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
Comments