எல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரம்; சீனாவின் முடிவுக்கு இந்தியா மறுப்பு
1959 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு கோட்டையே பின்பற்ற வேண்டும் என்ற சீனாவின் நிலைப்பாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.
சீன பிரதமர் சூ என்லாய் இந்திய பிரதமர் நேருவுக்கு 1959 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில், நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையே சீனா பின்பற்றுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, சீனாவின் ஒருதலைபட்சமான வரையரையை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
1993, 1996,2005 ஆகிய ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையே அமைதி, நம்பிக்கை ஏற்பட எல்லை தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை ஏற்று செயல்பட இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படாமல் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த விதிமுறைப்படி சீனா செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Comments