தமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு.. எவை இயங்கும்.? எவை இயங்காது..?

0 105156
தமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் எதற்கெல்லாம் நீட்டிப்பு..? எதற்கெல்லாம் அனுமதி..

தமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் எதற்கெல்லாம் நீட்டிப்பு..? எதற்கெல்லாம் அனுமதி.. 

எதற்கெல்லாம் தடை நீடிப்பு:

பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிப்பு

அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பாட்டிற்கான தடை தொடரும்

வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு

மதம், அரசியல், பொழுது போக்கு கூட்டங்களுக்கான தடை நீட்டிப்பு

திரையரங்கு, நீச்சல்குளம், பொழுது போக்கு பூங்கா,பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் தடை நீட்டிப்பு

கடற்கரை, உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம், சுற்றுலா தலங்களுக்கான தடை நீட்டிப்பு

எதற்கெல்லாம் அனுமதி:

டீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி

டீக்கடைகள், உணவகங்களில் பார்சல் சேவை இரவு 10 மணி வரை செயல்படலாம்

திரைப்பட படப்பிடிப்புகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி

சென்னை விமான நிலையத்திற்கு தினமும் 100 உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி

கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தொடரும்

அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி

ஊரக மற்றும் நகர்புற வார சந்தைகள் செயல்பட அனுமதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments