"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இந்திய கடற்படையிலிருந்த 70 ஆண்டுகள் பழமையான விராட் போர் கப்பலை உடைக்கும் பணிகள் தொடக்கம்!
இந்திய கடற்படையில் இருந்து விடைகொடுக்கப்பட்ட 70 ஆண்டுகள் பழமையான விமானந்தாங்கி போர் கப்பல் விராட்டை (Viraat) உடைக்கும் பணிகள், குஜராத்தின் அலாங் துறைமுகத்தில் தொடங்கியுள்ளன.
சுமார் 29 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பலில் 26 போர் விமானங்களை நிறுத்த முடியும்.
பிரிட்டன் கடற்படையால் அக்கப்பல் முதலில் பயன்படுத்தப்பட்டபோது ஹெச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ் ( HMS Hermes) என அழைக்கப்பட்டது.
இந்தியாவிடம் 1987ம் ஆண்டில் விற்கப்பட்ட பிறகு அதன் பெயர் விராட் என மாற்றப்பட்டது.
இதையடுத்து 30 ஆண்டுகள் சேவையில் இருந்த அக்கப்பலுக்கு 2017ம் ஆண்டில் விடை கொடுக்கப்பட்டது.
பராமரிப்புக்கு ஆகும் அதிக செலவீனம் போன்ற காரணத்தால் உடைக்க முடிவு செய்யப்பட்டு அலாங்குக்கு கொண்டு வரப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.
Comments