அஜர்பைஜானுடனான போரில் தங்கள் நாட்டு பாதுகாப்பு வீரர்கள் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்: ஆர்மீனியா

0 4485
அஜர்பைஜானுடனான போரில் தங்கள் நாட்டு பாதுகாப்பு வீரர்கள் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்: ஆர்மீனியா

அஜர்பைஜானுடனான போரில் தங்கள் நாட்டு பாதுகாப்பு வீரர்கள் மேலும் 26 பேர் உயிரிழந்ததாக ஆர்மீனியா தெரிவித்துள்ளது.

நாகோர்னி, கராபாக் பிராந்தியங்கள் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ஆர்மீனியா, அஜர்பைஜானுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், பீரங்கிக் தாக்குதல் நடைபெற்றதாக இரு அரசுகளும் தெரிவித்துள்ளன.

பிஸூலி, ஜப்ராயில், அக்டெரே, டெர்ட்டர், தாஷ்கேசன் உள்ளிட்ட எல்லைபகுதிகளில் சண்டை நடந்து வருவதாகவும், இதில், தாய் மற்றும் அவரது குழந்தை உள்பட 95 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் ஆர்மீனியாவுக்கு ரஷ்யாவும் அஜர்பைஜானுக்கு துருக்கியும் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments