உ.பி.,யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண் பலி; குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிடக் கோரி போராட்டம்

0 4588
உத்தரபிரதேசத்தில் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரபிரதேசத்தில் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹாத்ராஸ் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்த 20 வயது இளம்பெண்ணை, அவரது துப்பட்டாவின் மூலமே கட்டி இழுத்து சென்ற 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு நாக்கையும் வெட்டியுள்ளனர்.

முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த பெண் டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை செய்த நால்வரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை உடனடியாக தூக்கிலிடக் கோரி மருத்துவமனை முன்பு தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments