300 வது இலகு ரக நவீன ஹெலிகாப்டரை தயாரித்து ஹெச்.ஏ.எல் நிறுவனம் சாதனை...

0 2353
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், 300வது நவீன இலகுரக ஹெலிகாப்டரை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், 300வது நவீன இலகுரக ஹெலிகாப்டரை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

பிரதமர் மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு, புதிய மைல்கல்லாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர் வடிமைப்பு மற்றும் தயாரிப்பதற்கு இது மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மாதவன் தெரிவித்துள்ளார்.

தற்போது முப்படைகளுக்கும் 73 இலகுரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அவற்றில், 38 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சியவை வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments