11 மாநிலங்களில் 56 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3, 7ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
11 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 சட்டப்பேரவைத் தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 3 மற்றும் 7ம் தேதியன்று இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
பீகாரில் காலியாகவுள்ள ஒரு மக்களவைத் தொகுதி, மணிப்பூரில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும்.
By-poll on 1 Parliamentary constituency of Bihar & 2 Assembly constituencies of Manipur to be held on Nov 7. By-poll on 54 assembly constituencies in Chhattisgarh, Gujarat, Jharkhand, Karnataka, MP, Nagaland, Odisha, Telangana, UP to be held on Nov 3. Counting of votes on Nov 10. pic.twitter.com/ZdAjXjthti
— ANI (@ANI) September 29, 2020
Comments