2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுவை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 17 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
மேலும் இந்த மனுக்களை விரைந்து விசாரிக்கக்கோரி தனியே மனுக்கள் தாக்கல் செய்தன. இதை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் பரிசீலித்து, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது.
Delhi High Court allows plea of CBI and ED seeking early hearing on their appeal against the acquittal of all accused in 2G spectrum allocation scam case.
— ANI (@ANI) September 29, 2020
Court says the hearing will start from 5th October on a day-to-day basis. pic.twitter.com/TbJaEAXVXz
Comments