இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் சேருவதற்கு 86 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

0 2420
இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் சேருவதற்கு 86 ஆயிரம் பேர் விண்ணப்பம்

இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் சேருவதற்கு 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெற்ற நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள     1 லட்சம் இடங்களில் சேர்வதற்கு 86,326 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், சான்றிதழ் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அந்த பணிகள் முடிவடைந்ததும் அக்டோபர் 1ம் தேதி முதல் மாவட்ட கல்வி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, அக்டோபர் 3 முதல் 7ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments