தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: முதலமைச்சர்

0 11808
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து  முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ளது.

இந்த சூழ்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில் தமிழகத்தை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் என்றும்,  இந்த நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.   

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அரசு சுமார் 7,323 கோடி ரூபாய் செலவிட்டு இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். இதில் மருத்துவத்துக்கு 1,983 கோடி ரூபாயும், நிவாரணம் சார்ந்த பணிக்கு 5,340 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments