பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு -பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

0 1765
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு -பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

பாபரி மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், மதரீதியான பதற்றம் அதிகம் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தீர்ப்பு வெளியான பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்றும், தீர்ப்பை வைத்து மதவாத மோதல்களை ஏற்படுத்த இருதரப்பிலும் உள்ள விஷமிகள் முயற்சிக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

ராமஜன்மபூமி-பாபரி மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ள பல அமைப்புகள் , மசூதி இடித்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கின்றன.

அது நடக்கவில்லை என்றால் அந்த அமைப்புகள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடும் எனவும் மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments