அவதார் 2ஆவது பாக படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு!

0 2950
அவதார் 2ஆவது பாக படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு!

உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்த அவதார் படத்தின் 2ஆவது பாக படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவதார் படத்தின் 2ஆவது, 3ஆவது பாகங்களுக்கான படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஜேம்ஸ் கேமரூன், முன்னணி நடிகர் அர்னால்டுடன் வீடியோ அழைப்பில் பேசுகையில், 2ஆவது பாக படப்பிடிப்பு 100 சதவீதமும்,3ஆவது பாக படப்பிடிப்பு 95 சதவீதமும் முடிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

2022ம் ஆண்டு டிசம்பரில் 2ஆவது பாகம் ரிலீஸ் ஆகும் என படத் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments