பாலியல் வன்கொடுமை வழக்கு:அனுராக் காஷ்யப்பை கைது செய்ய மும்பை போலீசுக்கு 7 நாள் கெடு
பாலியல் வன்கொடுமை வழக்கில் அனுராக் காஷ்யப்பை 7 நாள்களுக்குள் (seven days ultimatum) கைது செய்ய வேண்டுமென மும்பை போலீசுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கெடு விதித்துள்ளார்.
இந்தி நடிகை பாயல் கோஷ் அளித்த புகாரின்பேரில் இயக்குனர் அனுராக் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாயல் கோஸ், இந்திய குடியரசு கட்சித் தலைவரும், மத்திய சமூக நீதித்துறை அமைச்சருமான ராம்தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய அதாவலே, அனுராக்கை கைது செய்யவில்லையெனில் மும்பை முழுவதும் தமது கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்றார்.
Comments