2ஜி அலைக்கற்றை மேல் முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரிய மனு-இன்று உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்
2ஜி அலைக்கற்றை மேல் முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரிய மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் அ. ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 17 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதி மன்றத்தில் அமலாக்கப் பிரிவும், சிபிஐயும் மேல்முறையீடு செய்தன.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுவதால், அதற்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு மனுத்தாக்கல் செய்தன. இந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Comments