மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க வேண்டும் என ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி இருக்கிறார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவ்வாறு இணைந்தால், தற்போது முதலமைச்சராக இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஓராண்டுக்கும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாஜக தலைவர் தேவேந்திர பத்னாவிசும் முதலமைச்சராக இருக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைக்காவிடில், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவ்வாறு சரத்பவார் இணைந்தால் அவருக்கு பெரிய பதவி வழங்கப்படும் என்றும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
Comments