கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஜி20 மாநாடு முதன்முறையாக காணொலி காட்சியாக நடக்கிறது
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடப்பாண்டு நடக்க உள்ள ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு முதன்முறையாக காணொலி காட்சியாக நடக்கிறது.
இந்த உச்சி மாநாடு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் தலைமையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக கடந்த 9 ஆம் தேதி, பிரதமர் மோடியும், சவுதி அரேபியாவின் மன்னரும் கலந்துரையாடி உள்ளனர்.
இந்த மாநாட்டில், தொற்றுநோய்களின் போது கண்டறியப்பட்ட பாதிப்புகளை சீர் செய்வது, சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைப்பது, உயிர்களைப் பாதுகாப்பதிலும், வளர்ச்சியை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்துவது உள்ளிட்ட கருப்பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.
#G20 Energy Ministers concluded their meeting under the #G20SaudiArabia Presidency on September 28, 2020. pic.twitter.com/HnPJ2bugzR
— G20 Saudi Arabia (@g20org) September 28, 2020
Comments