ஆன்லைன் வகுப்புகளை அங்கீகரிக்க மறுப்பு குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1222
ஆன்லைன் வகுப்புகளை அங்கீகரிக்க மறுப்பு குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளை அங்கீகரிக்க மறுத்ததாகக் கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் அக்டோபர் 5ஆம் தேதி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தனியார் மருத்துவக்கல்லூரி முழுக்கட்டணத்தைச் செலுத்தும்படி நிர்ப்பந்திப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்லூரி தரப்பில் அக்டோபர் 10ம் தேதிக்குள் 40 சதவீத கட்டணமும், மீதமுள்ள 60 சதவீத தொகையினை இரண்டு தவணைகளாக வசூலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் தரப்பில், தனியார் பள்ளிகளைப் போல, கடந்த ஆண்டு கட்டணத்தில் 75 சதவீதத்தை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்க வேண்டும் எனவும், ஆன் லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புக்களை இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 40 சதவீத கட்டணத்தை அக்டோபர் 29ம் தேதிக்குள் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments