பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு : லக்னோ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக பாஜகவின் வழிகாட்டுதல் குழுவின் முக்கிய தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி உட்பட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தினசரி வழக்கை நடத்தி இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்குமாறு, கடந்த 2017ம் தேதி நீதிபதி சுரேந்திர குமாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Comments