போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ஜாமீன் மனு நிராகரிப்பு

0 2386
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ஜாமீன் மனு நிராகரிப்பு

பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரின் ஜாமீன் மனுவை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரும் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இவர்களோடு வழக்கில் புதிதாகச் சேர்க்கப்பட்ட சிவப்பிரகாஷ் என்பவர் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இன்று மீண்டும் நடைபெற்றது.

விசாரணையின் முடிவில் 4 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி, நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரை மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments