சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.38,000க்கும் கீழ் சரிவடைந்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் 38 ஆயிரத்துக்கும் கீழ் சரிவடைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4 ஆயிரத்து 780 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 240 ரூபாயாகவும் இருந்தது.
இந்நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 740 ரூபாயாக விற்பனையாகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து, 37 ஆயிரத்து 920 ரூபாயாக விற்பனையாகிறது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் சரிந்து 61 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையாகிறது.
Comments