மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரி விதைகளை கள ஆய்வுக்கு அனுமதித்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரி விதைகள் கள ஆய்வைத் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் செய்ய மத்திய அரசு அனுமதித்திருப்பதற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித குலத்துக்கும் உயிரினங்களுக்கும் ஆபத்தான மரபணு மாற்றக் கத்தரிக்காய் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என விவசாயிகள் அஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமையாக்கும் நடவடிக்கைக்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கள ஆய்வை மேற்கொள்ள அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Comments