சென்னையில் மகள்கள் தினத்தில் மகளுடன் பேசமுடியாததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை

0 3750
சென்னையில் மகள்கள் தினத்தில் மகளுடன் பேசமுடியாததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் மகள்கள் தினத்தில் மகளுடன் தொலைப்பேசியில் பேச முயன்று முடியாமல் போனதால் மனமுடைந்த தந்தை, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பேரை சேர்ந்த சிவபிரகாசம் என்பவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் கடந்த 3 வருடங்களாக ஒரே வீட்டில் இருந்தும் அவருடன் பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனைவியும், மகளும் வெளியூர் சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட சிவப்பிரகாசம், நேற்று மகள்கள் தினம் என்பதால் மகளுடன் தொலைப்பேசியில் பேச முயன்றுள்ளார்.

அது முடியாமல் போகவே ஏற்கனவே மனவுளைச்சலில் இருந்தவர், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments