ஆஸ்திரேலிய தீம் பார்க் விபத்து தொடர்பான வழக்கு; உரிமையாளருக்கு ரூ.18 கோடி அபராதம்!
ஆஸ்திரேலிய தீம் பார்க் விபத்தில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் உரிமையாளருக்கு 18.45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோல்ட் கோஸ்டில் உள்ள ட்ரீம் வேல்ட் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரெய்டு ஒன்றில் இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டை, தீம்பார்க் உரிமையாளரான ஆர்டென்ட் லீஷர் குரூப் லிமிடெட் நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில், நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
Comments