இயக்குநர் அனுராக்கை கைது செய்யாவிட்டால் உண்ணாவிரதம் - நடிகை பாயல் கோஷ்
தன்னை பாலியல் வன்கொடுமை செய்த திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பை போலீசார் கைது செய்யவில்லையெனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின்பேரில் மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் அனுராக் மீது போலீசார் அண்மையில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் போலீசாரால் எடுக்கப்பட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிய அக்காவல் நிலையத்துக்கு பாயல் கோஷ் நேற்று வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு நீதி அளிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் தெரிவித்தார்.
Comments