அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் - குழந்தை உயிரிழப்பு

0 9217
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் - குழந்தை உயிரிழப்பு

ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலை பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணும், குழந்தையும் உயிரிழந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கூலித் தொழிலாளி கணேஷ் என்பவரது மனைவி அர்ச்சனா, தலை பிரசவத்துக்காக நேற்றிரவு ராணிப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிகாலையில் குழந்தை இறந்தே பிறந்த நிலையில், தொடர்ந்து தாய் அர்ச்சனாவும் உயிரிழந்தார்.

உரிய சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என கூறி உடல்களை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments