வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில்மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Comments