திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி எளிமையாக நடைபெற்ற தீபவிழாவுக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

0 1448
தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் இன்று காலையில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா எளிமையாக நடைபெற்றது.

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் இன்று காலையில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா எளிமையாக நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் 29-ந் தேதியன்று நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளுக்காக இன்று காலையில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் இருந்து பந்தக்கால் கொண்டுவரப்பட்டு விநாயகர், முருகர், மகா ரதம், சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட திருத்தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் ராஜ கோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, கட்டளைதார்கள், உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments