பெலாரசில் அதிபர் பதவி விலகக் கோரி லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்
ஐரோப்பிய நாடான பெலாரசில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் தலைநகர் மின்ஸ்க்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாகச் சென்றனர்.
கடந்த மாதம் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஷென்கோ, 80 விழுக்காடு வாக்குகளையும், பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா 10 விழுக்காடு வாக்குகளையும் பெற்றதாக மத்திய தேர்தல் ஆணையம் கூறியதையடுத்து, அங்கு மக்கள் போராட்டம் நடந்து வருகிறது.
அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று 50வது நாளை எட்டியது. தலைநகர் மின்ஸ்க்கில் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொட்டும் மழைக்கு நடுவே பேரணியாகச் சென்று அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், இசைக்கருவிகளை இசைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
Comments