தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
எஞ்சிய கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் சேலம் , கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments