திருப்பதியில் நிறைவு பெற்றது பிரம்மோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 9 நாட்களாக நடை பெற்று வந்த பிரமோற்சவ திருவிழா, கொடி இறக்கத்துடன் நிறை வடைந்தது. கடந்த 19 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற் சவ விழா துவங்கியது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீதி உலாக்கள் ரத்து செய்யப்பட்டு கோயில் வளாகத்துக்குள் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பிரமோற் சவத்தின் 9 நாட்களிலும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந் தருளி அருள்பாலித்தார்.
விழாவின் கடைசி நிகழ்ச்சியாக, கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தின் மேல் இருந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள்,கலந்து கொண்டனர்.
Sri Venkateswara Swamy Brahomtsavam. Chakrasnanam on the final day. pic.twitter.com/80HTD8q9kz
— GoTirupati (@GoTirupati) September 27, 2020
Comments