கொரோனா நெருக்கடி : கத்தார் ஏர்வேஸூக்கு ரூ. 190 கோடி இழப்பு
கொரோனா நெருக்கடி காரணமாக கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 190 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Akbar al-Baker , ஏர் இத்தாலியின் பங்கு விலக்கல் மற்றும் தோஹாவை 4 அரபு நாடுகள் புறக் கணிப்பு காரணமாக இழப்பு ஏற்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள், 2017 ஜூன் மாதம் முதல் கத்தாரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதேபோல, மற்ற வளைகுடா அரபு நாடுகளும், அமெரிக்காவும், அரசியல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
Comments