மரபுச் சின்னங்களைக் காக்க நூறு விழுக்காடு மாசில்லா எரிபொருளுக்கு மாற வேண்டும்-அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சுற்றுலா நகரங்களில் மரபுச் சின்னங்களைக் காக்க நூறு விழுக்காடு மாசில்லா எரிபொருளுக்கு மாற வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
உலகச் சுற்றுலா நாளையொட்டி, சுற்றுலாவும் ஊரக மேம்பாடும் என்னும் தலைப்பிலான காணொலி மாநாட்டில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.
அப்போது, உள்ளூர்ப் பாரம்பரியம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் பண்பாட்டுச் செழுமை, வரலாறு, வியத்தகு கட்டடக் கலை ஆகியவை சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Comments