சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியானதில் 16 பேர் பலி
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியானதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிஜியாங் மாவட்டத்தில் சோங்கிங் நகரத்துக்கு அருகே உள்ள சாங்சாவோ நிலக்கரி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட் அதிகாலையில் தீப்பிடித்ததில் அதிகளவு கார்பன் மோனாக்சைடு வெளியானதாக கூறப்படுகிறது.
இதில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments