நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளில் கடுமையான எதிர்ப்பையும் மீறி கடந்த 20 ஆம் தேதி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
குடியரசுத்தலைவரின் ஒப்புதலையடுத்து வேளாண் மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டது.குடியரசுத்தலைவரின் இந்த ஒப்புதலையடுத்து வேளாண் மசோதாக்கள் சட்டமாக மாறியுள்ளது.
Comments