சேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு : உதவி வேளாண் அலுவலர் பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு தொடர்பாக உதவி வேளாண் அலுவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பிரதமரின் உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் 6 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக 51 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி பிரிவினர் பெத்தநாயக்கன்பாளையம் உதவி வேளாண்மை அலுவலர் அன்பழகன், கார் ஓட்டுநர் பிரகாஷ் ஆகியோரைக் கடந்த வாரம் கைது செய்தனர்.
இருவரும் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உதவி வேளாண்மை அலுவலர் அன்பழகனை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் முறைகேடாக நிதி பெற்றவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 15 லட்ச ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
Comments