பீடி, சிகரெட்டை பாக்கெட்டுடன் அல்லமால், தனித்தனியே விற்பனை செய்வதற்கு மகாராஷ்டிரா அரசு தடை விதிப்பு

0 9415
நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட்டை பாக்கெட்டுடன் அல்லாமல், தனித்தனியே விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தலின் தீமை மற்றும் புற்றுநோய் குறித்து எச்சரிக்கும் படங்கள் இடம்பெற்றிருக்கும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை அப்படியே விற்காமல், தனித்தனியே விற்பதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முழு சிகரெட் பாக்கெட்டையும் வாங்குமளவு பொருளாதாரம் இல்லாததால், 16, 17 வயது இளைஞர்களிடம் பரவி வரும் புகைப்பழக்கம் குறையும் என புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக புகையிலை பொருட்கள் மீதான வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்ட போது, புகைபிடிப்போரின் வீதம் 8 சதவீதம் வரை குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments