பெங்களூர் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது
பெங்களூரில் நகைக்கடையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 20ஆம் தேதி பெங்களூர் ஜாலஹள்ளியில் ராகுல் சஞ்சய் என்பவரின் நகைக் கடைக்கு வந்த இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கடையில் இருந்த மூன்றரைக் கிலோ தங்க நகைகள், 715 கிராம் வெள்ளி நகைகள், 4 லட்ச ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்தனர்.
இந்த வழக்கில் கண்காணிப்புக் கேமரா பதிவை ஆய்வு செய்த தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலத்தவரான கோபாராம், ஜிதேந்தர் மாலி, வீர்மாராவ் ஆகிய மூவரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒன்றே முக்கால் கிலோ தங்க நகைகள், மூன்றரை லட்ச ரூபாய் பணம், 2 இருசக்கர வாகனங்கள், ஒரு துப்பாக்கி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
Comments