மரணத்தை முன்கூட்டியே கணித்திருந்தாரோ ? ஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.

0 9461
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

பெற்றோருக்கு சிலை செய்வதற்கு ஆர்டர் கொடுத்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அதன் பின்னர் தன்னுடைய சிலை ஒன்றையும் செய்து தருமாறு சிற்பி ராஜ்குமாரிடம் கூறியுள்ளார்.

ஊரடங்கு காரணமாக சிலைக்கு போட்டோஷூட் கொடுக்க வர முடியாது எனக்கூறி, தனது புகைப்படங்கள் சிலவற்றையும் சிற்பிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது, சிலை செய்து முடிக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகளை சிற்பி செய்து வரும் நிலையில், எஸ்.பி.பி.யின் இறுதி பயணமே நடந்து விட்டது. தனது மரணத்தையும் முன்கூட்டியே உணர்ந்து சிலைக்கு எஸ்.பி.பி. ஆர்டர் கொடுத்திருந்தாரா என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments